ஆசையாக முத்தம் கொடுத்த காதலனின் நாக்கை துண்டாக்கிய காதலி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

முத்தம் கேட்ட காதலனின் நாக்கை கடித்து துண்டாக்கிய இளம்பெண்ணுக்கு 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

பார்சிலோனாவை சேர்ந்த அடாயா லோபஸ் எஸ்டெவ் என்கிற இளம்பெண் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இளைஞர் ஒருவரின் மீது காதல் வலையில் விழுந்துள்ளார்.

ஆனால் அவர்களுடைய காதல் அடுத்த இரண்டு மாதத்திலே கசந்துள்ளது. பிப்ரவரி 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்து சென்றுள்ளனர்.

அடுத்த சில நாட்களிலே மீண்டும் அந்த பெண்ணை தேடிவந்த இளைஞர், காதலை புதுப்பித்துள்ளார். பின்னர் 4 மாதங்கள் கழித்து பிரிந்து செல்ல இளைஞர் முடிவெடுத்து காதலியிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த அடாயா, கடுமையாக நடந்துகொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து மன்னிப்பு கேட்ட அடாயா, காதலனை கட்டிப்பிடித்துக்கொண்டு கடைசியாக ஒரு முத்தம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

உடனே அந்த இளைஞரும் முத்தம் கொடுக்க வந்துள்ளார். அப்போது அடாயா திடீரென இளைஞரின் நாக்கை கடித்து துண்டாக்கியுள்ளார்.

அவருடைய வாயிலிருந்து அதிக ரத்தம் வெளியேறுவதை பார்த்ததும், அடாயா அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதற்கிடையில் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அடாயாவிற்கு 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என இளைஞர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்