புயல் வேகத்தில் தாக்கிய நிலச்சரிவு: பார்ப்பவர்களை பதற வைத்த வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவின் புஜியான் மாகாணத்தில் பெரும் நிலச்சரிவில் சிக்கி கார்கள் பல புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வீடியோ ஒன்று வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.

புஜியான் மாகாணத்தில் உள்ள வூப்பிங் கவுண்டியில் குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அங்குள்ள 8 மாகாணங்களில் 45 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கையின் இந்த ருத்ர தாண்டவத்துக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் மாயமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே வூப்பிங் கவுண்டியில் குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பல கார்கள் அந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதுடன், அங்கிருந்த நபர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

புயல் வேகத்தில் வந்த நிலச்சரிவு காரணமாக, அந்த நபர் காருக்குள் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நிலச்சரிவு தொடர்பில் தகவல் தெரியவந்த மீட்பு குழுவினர், துரிதமாக செயல்பட்டு, சாலையில் குவிந்துள்ள மண்ணை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே காருக்குள் சிக்கிய நபரை சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்