திட்டமிட்டு கொல்லப்பட்டாரா கால்பந்து வீரர் எமிலியானோ? விமானியை கைது செய்த பொலிஸார்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

விமான விபத்தில் பலியான அர்ஜெண்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சாலா வழக்கில், 64 வயது விமானியை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான எமிலியானோ சாலா, ஜனவரி 21ம் திகதி பிரான்ஸ் நாட்டின் நன்டேஸ் பகுதியில் இருந்து வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, திடீரென விமான விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.

தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி வந்த கடற்படையினர் 15 நாட்களுக்கு பிறகு அவரது உடலை கண்டுபிடித்தனர். ஆனால் 59 வயதான விமானி, டேவிட் இபோட்சன் உடலை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த விபத்து தொடர்பாகவிசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், 64 வயதான டேவிட் ஹென்டர்சன் என்கிற விமானியை நேற்று கைது செய்துள்ளனர்.

அவர் தீவிர விசாரணைக்கு பின் வெளியில் விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சம்பவம் நடைபெற்ற அன்று டேவிட் ஹென்டர்சன் தான் விமானத்தை இயக்க வேண்டியது. ஆனால் கடைசி நேரத்தில், இரவு நேரத்தில் பறக்க தகுதியற்ற தன்னுடைய நண்பர் டேவிட் இபோட்சனை விமானியாக அனுப்பியுள்ளார்.

இதனால் எமிலியானோ விமான விபத்து திட்டமிட்ட படுகொலையாக இருக்குமோ என்கிற கோணத்தில் கைது செய்திருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து பக்கங்களில் இருந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்