5 பேரின் தலையை துண்டிப்பதற்கு முன் கத்தியுடன் வீடியோ வெளியிட்ட குற்றவாளிகள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பராகுவே நாட்டில் உள்ள சிறை ஒன்றில் இரு குழுவினருக்கிடையே நடந்த பயங்கரமான தாக்குதலில் 9 கைதிகள் கொல்லப்பட்டதோடு, 12 பேர் காயமடைந்துள்ளனர்.

பராகுவே நாட்டில் உள்ள சிறையில், பிரேசிலின் மிகப்பெரிய குற்றவியல் வலையமைப்பான ப்ரைமர் கோமண்டோ கேபிடல் (பி.சி.சி) மற்றும் மோசமான போதைப்பொருள் தலைவன் அர்மாண்டோ ஜேவியர் ரோட்டெலா தலைமையிலான கிளான் ரோட்டெலா குழுவினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

இந்த கொடூரமான தாக்குதலில் 5 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதனை உறுதி செய்துள்ள உள்ளூர் அமைச்சக அதிகாரிகள், சம்பவத்தில் இரு குழுவை சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

வீடியோவினை பார்க்க...

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு கும்பல்களுக்கிடையில் நீண்டகாலமாக இருந்து வந்த விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறைத் தலைவர் விக்டர் வல்பூனா கூறுகையில், தாக்குதலின் போது சில கைதிகளிடம் துப்பாக்கிகள் இருந்ததால், காம்பவுண்டை கைப்பற்றி அமைதியை நிலைநாட்ட கடினமாக இருந்தது.

7 மணிநேரத்திற்கு பின்னர் அதிகாரிகள் விமான உதவியைக் கோரியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தாக்குதலுக்கு முன்னர், பி.சி.சி குண்டர்கள் கைகளில் கத்தியுடன் கோஷமிடும் வீடியோ காட்சி ஒன்றினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

ஏறக்குறைய ஒன்பது ட்ராக் சூட்-உடையணிந்த கைதிகள், கைகளில் உலோகத்திகளுடன் அங்கு மறைந்திருப்பதை அவை காட்டுகின்றன.

இந்த சம்பவத்தால் தற்போது சிறைச்சாலை இயக்குனர் வில்பிரிடோ குயின்டனா மற்றும் சிறைச்சாலைகளின் இயக்குநர் பிளாஸ் மார்டினெஸ் ஆகிய இருவரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை நீதி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்