நள்ளிரவில் நகரத்தை சுற்றிவந்த பீரங்கி: பதறிப்போன பொதுமக்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சோவியத் பனிப்போர் கால பீரங்கியை எடுத்துச்சென்று போலந்து நகரத்தைச் சுற்றிய நபருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போலந்து நாட்டில் பெயர் வெளியிடப்படாத ஒருவர் அதிக மதுபோதையில் இருந்ததால், இரவு 10 மணியளவில் அங்கு வைக்கப்பட்டிருந்த பீரங்கியை எடுத்துக்கொண்டு நகரத்தை சுற்றிவர முடிவு செய்துள்ளார்.

சோவியத் டி -55 எனப்படும் இந்த பீரங்கி வகையானது 1950 மற்றும் 1960-க்கு இடைப்பட்ட காலங்களில் பல சண்டைகளில் ஈடுபடத்தப்பட்டது.

7000 பொதுமக்களை கொண்ட அப்பகுதியில் பீரங்கி சுற்றுவதை பார்த்ததும், தாக்குதல் நடத்த வருவதாக அச்சமடைந்துள்ளார்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மதுபோதையில் இருந்த 49 வயது நபரை கைது செய்துள்ளனர்.

உள்ளூர் ஊடகத்தின் படி, பீரங்கியை வைத்து ஒருவர் ஏதேனும் சேதம் ஏற்படுத்தியிருந்தால் 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அப்படி இல்லையென்றால் 2 ஆண்டுகள் மட்டும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்