இந்த பெண்ணின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன தெரியுமா?: தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், ஒரு பெண் மகிழ்ச்சியுடன் நடனம் ஆடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்தப் பெண்ணின் மகிழ்ச்சிக்கான காரணத்தை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். சாகசப்பயணங்கள் மேற்கொண்டு புகைப்படம் எடுக்கும் Laura Grier என்னும் பெண்மணி, உகாண்டாவிலுள்ள Bwindi தேசிய பூங்காவிற்கு சென்றுள்ளார்.

அப்போது கால்களில் செருப்பில்லாமல் நடக்கும் ஒரு பெண்ணைக் கண்டிருக்கிறார்.

விசாரித்ததில், அந்த பெண் வாழ்க்கையில் இதுவரை செருப்பே போட்டதில்லை என்று அறிந்து, தான் உபரியாக வைத்திருந்த ஒரு ஜோடி ஷூக்களை அவருக்கு கொடுக்கும்படி தனது கார் ஓட்டுநரிடம் கூறியிருக்கிறார்.

உடனே காரை நிறுத்திய ஓட்டுநர் அந்த பெண்ணிடம் ஷூக்களை அளிக்க, அவருக்கோ ஷூ போடத் தெரியாது.

எனவே கீழே அமர்ந்து அவர் அந்த பெண்ணின் கால்களில் ஷூக்களை அணிவிக்க, அவரை அன்புடன் பார்க்கிறார் அந்தப் பெண்.

பின்னர் ஷூ அணிந்த மகிழ்ச்சி தாங்க முடியாமல், ஷூவைத் தட்டியபடி அவர் ஒரு நடனம் ஆட, பார்ப்பவர்களும் மகிழ்ந்து நெகிழ்ந்தும் போகிறார்கள்.

அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார் Laura Grier.

வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் அந்தப் பெண் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சுழன்று ஆட, பார்ப்பவர்களும் உற்சாகக் குரல் எழுப்பி அவரை உற்சாகப்படுத்துவதைக் காணலாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்