விவகாரத்து வாங்கிய மனைவிக்கு அடித்த அதிர்ஷ்டம்... நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து வாங்கிய நிலையில், அவர் தன்னுடைய முன்னாள் மனைவிக்கு 145,000 டொலர் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அர்ஜெண்டினாவின் Comodoro Rivadavia பகுதியைச் சேர்ந்த தம்பதி கடந்த 1982-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.

சுமார் 30 ஆண்டு காலம் மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் வாழ்க்கையில், கடந்த 2011-ஆம் ஆண்டு விவகாரத்திற்கு முடிவு செய்துள்ளனர். ஆனால் என்ன காரணத்திற்காக விவகரத்து என்ற தகவல் இல்லை.

இத்தனை ஆண்டுகள் மனைவி எங்கும் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து வீட்டு வேலை செய்து வந்ததால், அவர் தற்போது வயதான நிலையில்(60 வயது) உள்ளதால், இனி எங்கும் வேலைக்கு செல்ல முடியாது, பிள்ளைகளும் அவருடன் செல்ல விரும்பாததால் அவர்களுக்கு தேவையான செலவு மற்றும் திருமணம் ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்து வாங்கிய போதும், மனைவியின் வயதை கருத்தில் கொண்டும், அவரின் எதிர்காலம் மற்றும் பொருளாதார தேவைகளின் அடிப்படையில் அவர் 145,000 டொலர் அவர் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்