சுற்றுலா சென்ற இடத்தில் கடலில் நீந்த சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற ஒரு பெண் கடலில் நீந்தச் சென்றபோது கொடிய ஜெல்லி மீன் ஒன்று அவரை கொட்டியுள்ளது.

Naomi Mateos (23) என்ற இளம்பெண், தனது தோழி ஒருவருடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றபோது கடலில் நீந்தச் சென்றிருக்கிறார்.

அப்போது கொடிய ஜெல்லி மீன் ஒன்று அவரை கொட்ட, இடுப்பிலிருந்து முதுகு வரை பயங்கர வேதனை ஏற்பட்டிருக்கிறது.

சிறிது நேரத்தில் உடல் முழுவதும் மரத்துப்போக, உதவி கோரி கூச்சலிட்டிருக்கிறார் அவர்.

கரையில் நின்றிருந்த அவரது தோழி அதை கவனித்து விட்டு, நீந்திச் சென்று Naomiயைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Naomiக்கு முதலுதவி செய்யப்பட்டுள்ளது.

ஜெல்லி மீன் கொட்டியதால் உடல் முழுவதும் ஏற்பட்ட அடையாளங்களைக் காட்டும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் Naomi.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்