கரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

17 ஒரு கரடி தனக்கு பசிக்கும்போது சாப்பிடுவதற்காக உணவாக சேமித்து வைக்கப்பட்ட ஒரு நபர், மம்மி போல மீட்கப்பட்ட சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய வேட்டைக்காரர்கள் சிலர் வேட்டையாட சென்றபோது ஒரு குறிப்பிட்ட குகைக்கு முன் நின்று அவர்களது நாய்கள் குறைக்கத் தொடங்கியுள்ளன.

அந்த இடத்திலிருந்து நகராமலே அவை குறைக்கவே, அந்த வேட்டைக்காரர்கள் குகைக்குள் சென்று பார்த்தபோது அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே எகிப்திய மம்மி போல் காணப்படும் ஒரு உருவத்தை அவர்கள் கண்டுள்ளனர். சற்று அருகில் சென்று பார்த்தபோதுதான் அந்த நபர் உயிருடன் இருப்பதை அவர்கள் கவனித்திருக்கிறார்கள்.

சாகும் தருவாயிலிருந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார்கள் அவர்கள்.

மருத்துவர்கள் அவரது முதுகெலும்பு உடைந்துள்ளதையும் ஒரே இடத்தில் அசையாமல் இருந்ததால் அவரது சதை அழுகத் தொடங்கியிருப்பதையும் கண்டு, அவர் எப்படி இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் உயிருடன் இருந்தார் என ஆச்சரியப்பட்டுள்ளனர்.

அவரது பெயர் என்ன என்று கேட்டபோது, தனது பெயர் அலெக்ஸ்சாண்டர் என்றும், தனது கடைசி பெயர் நினைவில் இல்லை என்றும் கூறியுள்ளார் அவர்.

கரடியுடன் தான் சண்டையிட்டதில் தனது முதுகெலும்பு முறிந்து போனதாகவும், அதை தன்னால் ஜெயிக்க முடியவில்லை என்றும் கூறிய அலெக்சாண்டர், அந்த கரடி பின்னாட்களில் தனக்கு பசிக்கும்போது சாப்பிடுவதற்காக தன்னை உணவாக சேமித்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் தனது சிறுநீரை மட்டுமே குடித்து தான் உயிர் வாழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்