மாயமான கோடீஸ்வரரின் மனைவி! கணவருக்கு வந்த கடிதம்.. வெளியான தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நோர்வே நாட்டை சேர்ந்த மிக பெரிய கோடீஸ்வரர் டாம் ஹேகின் மனைவி எட்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

கோடீஸ்வரர் டாம் ஹேகின் மனைவி அன்னி எலிசபெத் ஹேகின். இவர் கடந்தாண்டு அக்டோபர் 31ஆம் திகதி மாயமானார்.

அவர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அன்னியை விடுவிக்க வேண்டுமென்றால் €9மில்லியன் பணம் கொடுக்க வேண்டும் என கடத்தல்காரர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் 8 மாதங்கள் ஆகியும் அவர் பற்றிய தகவல் வெளியாகாததால் அன்னி கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் டாமை கடத்தல்காரர்கள் தொடர்பு கொண்டு பேசினர், அப்போது கூட அன்னி உயிரோடு இருக்கிறாரா என்பது குறித்து அவர்கள் கூறவில்லை என தெரியவந்துள்ளது.

வேறு எதையோ மறைக்க அன்னி கடத்தப்பட்டதாக நாடகம் நடத்தப்பட்டதா என்ற கோணாத்திலும் விசாரணை நடந்தது.

எப்படியிருந்தாலும் அன்னி உயிரிழந்திருக்கலாம் என்றே பொலிசார் கருதுகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்