லண்டனில் பயிற்சி! லட்சக்கணக்கில் வருமானம்... அசத்தும் இந்த தமிழ் இளைஞர் யார்?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சென்னையை சேர்ந்த 22 வயது இளைஞர் லண்டனில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில் பயிற்சி எடுத்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் ரூ 60 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேரவுள்ளார்.

ஷயாம் என்ற இளைஞர் பெங்களூரில் உள்ள International Institute of Information Technology கல்லூரியில் I-Mtech என்கிற இரட்டைப் பட்டப் படிப்பைப் படித்துள்ளார்.

பின்னர் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்த பிறகு அங்கு ஓன்லைனில் நேர்காணல் நடத்தி இருக்கிறார்கள்.

அதில் தேறியவர்களை, ஜேர்மனியில் உள்ள முனிச் நகரில் ஒரு நேர்காணல் நடத்தி இருக்கிறார்கள். அதில் எல்லாம் தேறிய பிறகு தான் இப்போது கூகுள், ஷியாமை வேலைக்கு அழைத்திருக்கிறது.

அது மட்டுமின்றி, ஷியாம் கடந்த 2018-ல் லண்டனில் உள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தில் பயிற்சி எடுத்திருக்கிறார்.

ஷியாம் வரும் அக்டோபர் மாதம் போலாந்தில் உள்ள கூகுள் அலுவலகத்தில் வேலைக்கு சேரப் போகிறார்.

இவருக்கு மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம், அதாவது ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கணினி அறிவியல் பற்றிய அடிப்படைகளில் நல்ல அறிவும், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நல்ல திறனும் வளர்த்துக் கொண்டால் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என ஷியாம் கூறுகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்