பயணிகள் பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்: மொத்த பயணிகளின் நிலை என்ன?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடக்கு ஈராக்கின் கிர்குக் நகரில் வெடிகுண்டு தாக்குதலில் பயணிகள் பேருந்து ஒன்று சிக்கியதில், அதில் பயணம் செய்த பயணிகளில் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த தகவலை பொலிசாரும் மருத்துவமனை வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன. வியாழனன்று உள்ளூர் நேரப்படி மாலையில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை இந்த தாக்குதல் தொடர்பில் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் கிர்குக் நகரானது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதிக்கத்தில் இருந்த பகுதியாகும்.

கடந்த 2017 டிசம்பர் மாதம் கூட்டுப்படைகளின் துணையுடன் ஈராக் ராணுவம் பயங்கரவாதிகளிடம் இருந்து கிர்குக் பகுதியை மீட்டது.

இருப்பினும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது மலைப்பிரதேசங்களில் தஞ்சமடைந்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் கிர்குக் பகுதியில் அடிக்கடி தாக்குதல்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்