கரடியால் தாக்கப்பட்டு மம்மி போல மீட்கப்பட்ட நபர்: உண்மையில் நடந்தது என்ன? வெளியான புதிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் கரடியால் தாக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பின்னர் மம்மி போல மீட்கப்பட்ட நபர் தொடர்பில் உண்மைத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வெளியாகும் முக்கிய பத்திரிகை ஒன்று, கரடியால் தாக்கப்பட்டதாக கூறும் நபர் தொடர்பில் உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது.

அலெக்சாண்டர் என அறியப்படும் அந்த நபர் உண்மையில் கஜகஸ்தான் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும்,

அவரை கரடி தாக்கியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.

கரடி ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்டு, சுமார் ஒருமாத காலம் அதன் குகைக்குள் பத்திரப்படுத்தப்பட்ட நிலையில் நபர் ஒருவர் மீட்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் ஒன்று புகைப்படங்களுடன் வெளியாகி, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

மேலும், கரடியால் தாக்கப்பட்டு முதுகெலும்பு உடைக்கப்பட்டதால் அந்த நபரால் நகரவே முடியாமல் போனதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மாஸ்கோவின் முக்கிய பத்திரிகை ஒன்று, அந்த நபர் தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அலெக்சாண்டர் என மட்டும் அறியப்படும் அந்த நபர் தொடர்பில் மேலதிக தகவல் தெரியப்படுத்தும் பொதுமக்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

கரடியால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட விசாரணையில், அவ்வாறான சம்பவம் ஒன்று நடந்ததாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

வெளியான காணொளியை ஆராய்ந்த நிபுணர்கள், அது ரஷ்யா அல்ல எனவும் கஜகஸ்தான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த காணொளியில் பெண் ஒருவர் பேசும் மொழி கஜக் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கஜகஸ்தானில் இருந்து மாயமானவர்கள் தொடர்பில் விசாரித்துவரும் தனியார் குழு ஒன்று,

காணொளியில் இருக்கும் நபர் Aktobe பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், கரடியால் தாக்கப்பட்டதாக கூறப்படும் Tuva பகுதிக்கும் Aktobe பகுதிக்கும் இடையே சுமார் 1,600 மைல்கள் இடைவெளி உள்ளது.

மேலும், அந்த காணொளியில் இருக்கும் நபர் தாங்கள் தேடிவரும் மாயமான கஜகஸ்தான் நபராக இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு இந்த காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசரிக்கப்படும் எனவும், கரிடி தாக்கியதாக கூறுவது உண்மை இல்லை எனவும்

தற்போது அவர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், ஆனாலும் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்