சுறா மீன் தாக்குதலை விட இதில் உயிரிழந்தவர்களே அதிகம்! அதிர வைத்த புள்ளிவிபரம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

உலகளைவில் சுறா மீன்களின் தாக்குதலில் உயிரிழந்தவர்களை விட, செல்ஃபி எடுக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகமாக உள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செல்ஃபி மோகத்தால் உலகளவில் பல விபரீதங்கள் அரங்கேறி வருகின்றன. அபாயகரமான இடங்களில் நின்று செல்ஃபி எடுப்பதால் பல உயிர்களும் பறிபோயுள்ளன. இந்நிலையில், செல்ஃபியால் உயிரிழந்தவர்கள் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

உலகளவில் 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், செல்ஃபி எடுத்ததால் மட்டுமே 259 பேர் உயிரிழந்துள்ளதாக இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

அதே சமயம் இதே காலகட்டங்களில் சுறா மீன்களின் தாக்குதலினால் 50 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. செல்ஃபியால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் பெண்கள், இளைஞர்களே ஆவர்.

அத்துடன் இந்தியாவில் மட்டுமே செல்ஃபி எடுக்கும்போது விபத்தில் சிக்கி 159 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புள்ளி விபரத்தின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் உயரமான பாலங்கள் மற்றும் கட்டிடங்களில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்று பலர் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்