திருமணமான அடுத்த நாளே உயிரிழந்த கணவன்... மனைவி வெளியிட்ட கண்கலங்க வைக்கும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

திருமணமான அடுத்த நாளே கணவன் உயிரிழந்த நிலையில், அவரின் மனைவி வெளியிட்டிருக்கும் வீடியோ பார்ப்போர் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.

நியூசிலாந்தின் Otorohanga பகுதியைச் சேர்ந்தவர் Navar Herbert ரஃபி விளையாட்டு வீரரான இவர் Maia Falwasser என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலித்து வந்த இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்ததால், இந்த ஜோடிக்கு Kyrie என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் Navar Herbert கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடுமையான புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த போதும், அவரை காப்பாற்ற முடியாது எனவும், வாழப்போவது சில நாட்கள் மட்டுமே என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து காதலியான Maia Falwasser காதலன் இறப்பதற்குள் அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அதற்காக ஒரு திருமண விழாவை ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக உறவினர்கள் அனைவரும் வந்திருந்த நிலையில், காதலன் Navar Herbert-க்கு மோதிரத்தை அனுவித்தார்.

அப்போது அங்கிருந்த உறவினர்கள் சிலர் கண்கலங்கினர். அப்போது Navar Herbert அவரிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறினார். திருமணம் முடிந்த அடுத்த நாளே(கடந்த 25-ஆம் திகதி) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த ஜோடி தங்களின் திருமணத்தை அவுஸ்திரேலியாவில் இருக்கும் Gold Coast பகுதியில் செய்துள்ளனர். தற்போது Navar Herbert இறந்துவிட்டதால், அவரை மீண்டும் நியூசிலாந்திற்கு கொண்டு வர மனைவி சமூகவலைத்தளங்களில் நிதியுதவி கேட்டு, திருமண வீடியோவைக் கண்ட பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வர தற்போது வரை 84,000 டொலர் நிதியுதவி வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்