டிரம்பை சந்திக்க அமெரிக்கா செல்லும் இம்ரான் கான்? வெளியான தகவல்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றதில் இருந்தே பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு பதற்றம் நிறைந்ததாக நிலவி வருகிறது.

குறிப்பாக, பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறி, அந்நாட்டுக்கு வழங்கி வந்த பயங்கரவாத ஒழிப்பு நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியது.

இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயான உறவு பதற்றம் நிறைந்ததாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த மாதம் 20ஆம் திகதி, ஐந்து நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Reuters

ஏற்கனவே, இந்த பயணத்தை இந்த ஜூன் மாதத்தில் இம்ரான் கான் மேற்கொள்ள முதலில் திட்டமிட்டிருந்ததாகவும், உள்நாட்டு பட்ஜெட் வேலைகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, பாகிஸ்தான் பொய்களையும், வஞ்சகங்களையும் தவிர வேறொன்றையும் வழங்கவில்லை என்று டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்