இந்த அழகிய நபரா அவர்?: கரடியால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நபரின் பழைய புகைப்படங்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் கரடியால் தாக்கப்பட்டு குகைக்குள்ளிருந்த மீட்கப்பட்டதாக கூறப்பட்ட நபரின் பழைய புகைப்படங்கள் வெளியாகி, இவரா அவர் என ஆச்சரியப்பட வைத்துள்ளன.

ரஷ்யாவில் வேட்டைக்கு சென்ற சிலர் ஒரு குகைக்குள்ளிருந்து ஒருவரை மீட்டதாகவும், அவரை கரடி உணவுக்காக சேமித்து வைத்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

பின்னர் தனியார் ஆராய்ச்சியாளர்கள் சிலர் மேற்கொண்ட சோதனையில் அவர் ரஷ்யாவைச் சேர்ந்தவரே அல்ல என்றும், கசகஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் கண்டறிந்தனர்.

அவரது பெயர் அலெக்சாண்டர் என்றும் கொடிய சோரியாசிஸ் நோய்க்காக தன்னிடம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்தான் என்றும் Aktobe Medical Centre என்னும் மருத்துவமனையின் தலைமை மருத்துவரான Dr Rustam Isaev, தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சோரியாசிஸ் தாக்குவதற்கு முன்னர் அலெக்சாண்டர் எப்படி இருந்தார் என்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அந்த புகைப்படங்களைப் பார்த்தால், இவரா அவர் என ஒருபக்கம் கேட்க தோன்றினாலும், இன்னொரு பக்கம், மீண்டும் யாரோ ஏமாற்றுகிறார்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது!

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்