டிரம்ப்- கிம் சந்திப்பு.. வட கொரிய உடன் கைகலப்பில் ஈடுபட்ட அமெரிக்க பெண் அதிகாரி: காரணம்?

Report Print Basu in ஏனைய நாடுகள்

டொனால்டு டிரம்ப், கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தையின் போது, வெள்ளை மாளிகை புதிய பத்திரிகை செயலாளர், வட கொரிய பாதுகாப்பு வீரர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையன்று, வட கொரியாவுக்கு வருகை புரிந்து, அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன்னை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பதவியில் இருக்கும்போது வட கொரிய மண்ணில் காலடி வைத்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.

கிம்-டிரம்ப் சந்திப்பு நடந்த அறைக்கு வெளியே, வெள்ளை மாளிகையின் புதிய பத்திரிகை செயலாளர் ஸ்டீபனி கிரிஷாம், வட கொரிய பாதுாகப்பு வீரர்களுடன் தள்ளு முள்ளில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார். இதில், அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கிம்-டிரம்ப் சந்திப்பு நடக்கும் அறையை சுற்றி வட கொரிய பாதுகாப்பு வீரர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க மற்றும் தென் கொரிய நிருபர்கள், பாதுகாப்பு வீரர்களை கடந்து செல்ல ஒரு வழியைத் ஏற்படுத்த, ஸ்டீபனி கிரிஷாம், வட கொரிய அதிகாரிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். இதனால், சந்திப்பு நடக்கும் அறைக்கு வெளியே சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...