அகதிகள் முகாம் மீது கொலைவெறித் தாக்குதல்... சிதறிக்கிடந்த உடல்கள்: 40 பேர் கொத்தாக பலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

லிபிய தலைநகர் திரிப்போலியில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மையம் மீது நடந்த வான்வழி தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தாக்குதலில் சுமார் 80 பேர் படுகாயமடைந்ததாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

திரிப்போலி பகுதியில் அமைந்துள்ள இந்த அகதிகளுக்கான மையமானது லிபியா ராணுவ முகாமுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

இங்கு சுமார் 600 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பகுதியில் சுமார் 150 பேர் இருந்துள்ளனர் எனவும், பெரும்பாலும் சூடான் மற்றும் சோமாலியா பகுதி மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலரது உடல்கள் அந்த வளாகத்தில் சிதறிக்கிடந்ததாக கூறப்படுகிறது.

திரிப்போலி நகரை கைப்பற்றும் நோக்குடன் கடந்த 3 மாதங்களாக போராடி வரும் லிபிய தேசிய இராணுவம் என்ற கிளர்ச்சியாளர்கள் படையே இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக லிபியா அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

லிபிய தேசிய இராணுவம் என்ற கிளர்ச்சியாளர்கள் குழு தாக்குதலில் ஈடுபடுவது இது முதன்முறை அல்ல எனவும், கடந்த ஏப்ரல் மாதமும் தாக்குதலில் ஈடுபட்டது என கூறப்படுகிறது.

லிபிய தேசிய இராணுவம் என்ற இந்த அமைப்பானது யுத்தகால குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவது கண்டிக்கத்தக்கது என லிபியா ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...