விமானத்தில் வெடிகுண்டு.... விமானியின் எச்சரிக்கையை கேட்டு பதறியடித்து ஓடிய பயணிகள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் 'பயங்கரவாதி' என எழுதப்பட்டிருந்த கடிதம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் பதறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் ஃபூர்டெவென்டுரா விமான நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தில் இருந்து, 'பயங்கரவாதி' என கையெழுத்திட்டு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இது விமானியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பயணிகள் அனைவரும் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியான இந்த அறிவிப்பினை கேட்டு உள்ளிருந்த 180 பயணிகளும் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக சம்பவம் அறிந்து தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்தனர்.

ஆனால் அதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் 11 வயது சிறுவன் விளையாட்டிற்காக அப்படி செய்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் பொலிஸார் சிறுவனை விசாரணைக்கு உட்படுத்துவர்களா? இல்லையா என்பது பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...