பெண்ணின் காதுக்குள் திடீரென்று கேட்ட இரைச்சல்... அதிர்ந்த மருத்துவர்: வெளியான வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் பெண் ஒருவர் காதுக்குள் திடீரென்று கேட்ட சத்தம் மற்றும் வலி காரணாமாக மருத்துவரை நாடிய ஆவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

தாய்லாந்து நாட்டவரான 50 வயது பெண்மணி ஒருவர் கடந்த ஒரு வார காலமாக தமது இடப்பக்க காதில் வலி மற்றும் இரைச்சல் காரணமாக மருத்துவரை நாடியுள்ளார்.

அவரை பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள், அவரது காதுக்குள் இருந்து நாய்களின் உடம்பில் மட்டும் காணப்படும் ஒட்டுண்ணி ஒன்றை வெளியே எடுத்துள்ளனர்.

காதுக்குள் இரைச்சல் மற்றும் வலி தொடர்ந்ததால் அவர் மருத்துவரை நாடியுள்ளார். தொடர்ந்து micro-suction tube பயன்படுத்தி மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.

இதில் உயிருடன் உள்ள ஒட்டுண்ணி ஒன்றை பார்த்துள்ளனர். மட்டுமின்றி, அந்த ஒட்டுண்ணி அவரது காதுக்குள் கடித்த அடையாளங்களையும் கண்டறிந்துள்ளனர்.

காணொளியை காண

தொடர்ந்து 6 மில்லி மீற்றர் மட்டுமே வளர்ச்சி பெற்ற அந்த ஒட்டுண்ணியை வெளியே எடுக்கும் காணொளியையும் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

காதுக்குள் ஆழங்களில் அது நுழையாமலும், முட்டையிடாமலும் இருந்தது அந்த பெண்மணியின் அதிர்ஷ்டம் என கூறிய மருத்துவர்கள்,

இல்லை என்றால் அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்மணியின் குடியிருப்பில் ஏராளமான நாய்களை அவர் வளர்த்து வருவதாக மருத்துவர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது..

அவை வெளியே விளையாட சென்றுவிட்டு, இவரது படுக்கையில் இவருடனே படுத்தும் வந்துள்ளது. இதன் காரணமாக அந்த நாய்களில் இருக்கும் ஒட்டுண்ணி ஒன்று இவர் காதுக்குள் நுழைந்திருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வளர்ப்பு மிருகங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள் கண்டிப்பாக இதுபோன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்