அமெரிக்கா விரோதத்துடன் உள்ளது.. டிரம்ப் சந்திப்புக்கு பிறகும் குற்றம்சாட்டும் வடகொரியா!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பேச்சுவார்த்தைக்காக தாங்கள் தயாராக இருந்தாலும், அமெரிக்கா விரோத நடவடிக்கையைத் தொடர்வதாக வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது.

ஜி20 மாநாட்டிற்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா-தென்கொரியா எல்லையில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார்.

அப்போது இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்கா தங்கள் மீது விரோதப்போக்குடன் இருப்பதாக வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக வடகொரியா தரப்பில் கூறுகையில்,

‘எங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதற்கான படிவத்தில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

அதுவும் கிம்முடன் நட்பாக கை குலுக்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்த அதே நாளில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தாலும் அமெரிக்கா விரோத நடவடிக்கையைத் தொடர்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...