வெளிநாட்டில் ரூ.70 கோடி மோசடி செய்த இந்தியர்: 13 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கோடி மோசடி செய்த விவகாரத்தில் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் இந்தியரான கலே ஜெகதீஷ் புருசோத்தம்(43)

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து சுமார் 70 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.

மேலும், போலி கணக்குகளை தொடங்கி வங்கியில் இருந்து பல மில்லியன் டொலரை கடனாகவும் பெற்றும் மோசடி செய்துள்ளார். 2013 ஆம் ஆண்டு கலே ஜெகதீஷ் புருசோத்தம் மீது வங்கி வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் விசாரித்தபோது,

அவரது மோசடி வேலைகள் அம்பலமானது. இதையடுத்து, கலே ஜெகதீஷ் புருசோத்தம் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

விசாரணையின் முடிவில் கலே ஜெகதீஷ் புருசோத்தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன.

இதையடுத்து அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்