நாளுக்கு 94 படுகொலைகள்... உலக நாடுகளை பதற வைத்த நகரம்: வெளிவரும் புதிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் மட்டும் நாளுக்கு 94 படுகொலைகள் நடந்துள்ளதாக அரசே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

போதை மருந்து புழக்கம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மிகுந்த மெக்ஸிக்கோ நாட்டில் படுகொலை சம்பவங்கள் நடந்தேறுவது அன்றாட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாததில் மட்டும் மெக்ஸிக்கோவில் 17,065 படுகொலை1ள் நடந்தேறியுள்ளதாக அதிர்ச்சி தகவலை அரசே வெளியிட்டுள்ளது.

இது நாள் ஒன்றுக்கு 94 கொலைகள் என கணக்காக்கப்படுகிறது. மட்டுமின்றி கடந்த ஆண்டை விடவும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் மெக்ஸிக்கோ முழுவதும் 16,585 படுகொலைகள் நடந்தேறியுள்ளது.

மேலும், 2018 ஆண்டு மட்டும் 33,369 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது, மெக்ஸிக்கோவில் நடந்தேறும் படுகொலைகள் தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல் சேகரிக்கத் துவங்கிய 1997 ஆம் ஆண்டில் இருந்து மிக அதிகம் என கணக்காக்கப்பட்டது.

ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 2,543 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் ஜனவரி மாததில் 2932 பேரும், பிப்ரவரியில் 2877 பேரும், மார்ச் மாதம் 2933 பேரும், ஏப்ரல் மாதம் 2,801 பேரும் மே மாதம் 2,979 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறு இருக்க மெக்ஸிக்கோ ஜனாதிபதியாக ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் 2018 ஆம் ஆண்டு பொறுப்புக்கு வந்ததன் பின்னர் மட்டும் சுமார் 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்