வடகொரியாவில் கைதான அவுஸ்திரேலிய இளைஞர் விடுவிப்பு: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரிய அரசின் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதாக கூறி கைது செய்யப்பட்ட மாணவர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவில் கில் இல் சங் பல்கலைக்கழகத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக் சிங்லே (29) என்பவர் முதுகலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலெக் மாயமானதாகவும் அவர் தொடர்பான தகவல் எதுவும் தெரியவில்லை என்றும் அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அலெக் வியாழக்கிழமை வடகொரிய அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அலெக் சிங்லே எதற்காக கைது செய்யப்பட்டார் என்பதற்கான தெளிவான தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படாத நிலையில் இதற்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடகொரிய ஊடகங்கள், ''அலெக் வடகொரிய அரசின் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதை நேர்மையாக ஒப்புக் கொண்டார்.

மேலும் வடகொரிய இறையாண்மையை மீறியதற்காக மன்னிப்பு கோரினார்'' என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் ஸ்வீடன் அதிகாரிகள் சிலர் வடகொரிய அதிகாரிகளுடன் மேற்கொண்ட சந்திப்புக்கு பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிங்லே பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் அரசியல் சாராதவை எனவும், பொதுவான கருத்துகளை மட்டுமே அவர் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தமது கைது குறித்தும் விடுவிப்பு தொடர்பிலும் சிங்லே எந்த கருத்தையும் வெளியிட மறுத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers