தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அமீரக செல்வந்தர் அதிரடி திட்டம்: பனி மலையை இழுத்து வரப் போகிறாராம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த செல்வந்தரும் தொழிலதிபருமான ஒருவர், துருவப்பகுதியில் கடலில் மிதக்கும் பனிமலை ஒன்றை கப்பல் மூலம் இழுத்துக் கொண்டு வந்து அதன் மூலம் நாட்டின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க திட்டமிட்டுள்ளார்.

கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான Abdulla Alshehi என்னும் அமீரக செல்வந்தர், முதல் கட்ட நடவடிக்கையாக இந்த ஆண்டில்தானே, அண்டார்டிக் பகுதியிலிருந்து பனிமலை (iceberg )ஒன்றை 80 மில்லியன் டொலர் செலவில் அவுஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்காவுக்கு இழுத்து வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

1.2 மைல் பரப்பளவு கொண்ட ஒரு மாபெரும் பனிமலையை அமீரகத்திற்கு கொண்டு வருவதற்கு முன், சோதனை முயற்சியாக இதைச் செய்ய இருக்கிறார் Abdulla Alshehi. அமீரகத்திற்கு நிரந்தரமாக குடிநீர் வழங்குவதோடு, சுற்றுலாப்பயணிகளையும் இந்த திட்டம் ஈர்க்கும் என்கிறார் Abdulla Alshehi.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைவிட இந்த திட்டத்திற்கு குறைந்த செலவே பிடிப்பதோடு, கடல்வாழ் உயிரினங்களையும் இது பாதிக்காது என்கிறார் அவர்.

அப்படி அந்த பனிமலையை இழுத்துவரும்போது, 30 சதவிகிதம் பனி உருகிப்போய்விடும், என்றாலும் அது ஐக்கிய அமீரகத்திற்கு கொண்டு வரப்பட்டபின், பல மில்லியன் லிற்றர்கள் சுத்தமான குடிநீரைக் கொடுப்பதோடு, அந்த பகுதி குளிரடைவதால் இயற்கையாக மழையும் பொழியும் என்கிறார் Abdulla Alshehi.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...