வர்த்தகப் போர்ப்பதற்றம்.. அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடக்கம்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது.

அமெரிக்காவும், சீனாவும் இறக்குமதி செய்துகொள்ளும் பொருட்களுக்கு கூடுதல் வரியை விதித்து வந்தன. இதனால் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர்ப்பதற்றம் நீடித்தது.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கருவூலத்துறை செயலர் ஸ்டீவன் நூசின், வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லைதிஸர் ஆகிய இருவரும், சீனாவின் துணைப் பிரதமர் லியூ ஹீ, வர்த்தகத் துறை அமைச்சர் ஜோங் ஷான் ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக அமைந்ததாக, வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லோவ் தெரிவித்தார். மேலும், பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்ட விடயங்களை விரிவாக கூற முடியாது என்றும், விரிவான பேச்சுவார்த்தைக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற ஜி20 நாடுகள் மாநாட்டின் இடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வர்த்தைகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இருவரும் ஒப்புக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில், அமெரிக்கா-சீனா நாடுகளுக்கு இடையே மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடங்கியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்