ரயிலில் முத்தம் கொடுத்து கொண்ட பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள்.. பின்னர் நடந்த சம்பவம்.. வைரல் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஸ்பெயினில் ரயிலில் பயணம் செய்த ஓரினச்சேர்க்கை பெண்கள் முத்தம் கொடுத்து கொண்ட நிலையில் அவர்களை பெண் ஒருவர் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்த வீடியோ வைரலாகியுள்ளது.

பர்சிலோனா நகரில் உள்ள ரயிலில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

அதில், ஓரினச்சேர்க்கை பெண்கள் இருவர் முத்தம் கொடுத்து கொண்டதை பார்த்த பெண்ணொருவருக்கு கோபம் வந்தது.

இதையடுத்து, ஏன் எப்படி நடந்து கொள்கிறீர்கள், என் சகோதரரும் ஓரினச்சேர்க்கையாளர் தான், ஆனால் என் கண்முன்னால் இது போல அவர் முத்தம் கொடுக்க மாட்டார், அவர் எனக்கு மரியாதை அளிப்பார்.

நீங்கள் ஒருவரிடம் மரியாதையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்களும் மற்றவர்களிடம் மரியாதையாக நடக்க வேண்டும், உங்களை நினைத்தாலே எனக்கு கோபம் வருகிறது என கூறினார்.

மேலும் அவர் கோபத்தில் கத்துவதை சிலர் வீடியோ எடுத்த நிலையில், வீடியோ எடுப்பதை நிறுத்தவில்லையெனில் போனை பிடுங்கி கொள்வேன் என கூறினார்.

இந்நிலையில் அப்பெண்ணிடம் திட்டு வாங்கிய இரு பெண்களும், அவரை பார்த்து நீங்கள் இன ரீதியாக மற்றவர்களை வெறுப்பீர்கள் என நினைக்கிறோம் என கூறினர்.

இது தொடர்பான வீடியோவை பல ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

இதனிடையில் பொது இடத்தில் தங்களை மோசமாக திட்டிய பெண் குறித்து இருவரும் பொலிசில் புகார் அளித்துள்ள நிலையில் பொலிசார் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்