வெளிநாட்டில் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்... 10 மாத சம்பளத்தை ஒரே நிகழ்ச்சியில் வாங்கிய ஆச்சரியம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

துபாயில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாடல் நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையால் பாடல்களை பாடி பரிசை வென்றுள்ளார்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மொகமது ஷாகித். எலக்ட்ரிசியனான இவர் துபாயில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் அங்கு வார இறுதியில் நடக்கும் Colors Ka Sartaj என்ற பாடல் நிகழ்ச்சியின் இரண்டாவது எடிசனில் பாட்டு பாடி அசத்தி, 10,000 திர்ஹாம் வென்றுள்ளார்.

இதற்கு முன் இவர் இதோ துபாயில் கடந்த மே மாதம் நடந்த பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு 5,000 திர்ஹாம் வென்றுள்ளார்.

இது குறித்து மொகமது கூறுகையில், இதற்கு முன் தான் வென்ற பரிசுத்தொகையை நண்பனின் தங்கையின் திருமணத்திற்கு கொடுத்து உதவினேன். தற்போது கிடைத்திருக்கும் பரிசை வைத்து, பீகாரி நான் புதிதாக வீடு கட்டி வருகிறேன், அதற்கு பயன்படுத்தப்போகிறேன் கடவுளுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers