நடுவானில் பலத்த காற்றில் சிக்கிய விமானம்.. தூக்கி எறியப்பட்ட பயணிகள்: வெளியான வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் இருந்து துபாய்க்கு பயணித்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், நடுவானில் பயங்கரமாக கொந்தளித்ததில் சிக்கி பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்.

A380 என்ற டபுள் டெக்கர் பயணிகள் விமானம் ஆக்லாந்திலிருந்து துபாய் பயணித்துள்ளது. பாரசீக வளைகுடாவில் பறந்துக்கொண்டிருந்த போது திடீரென பலத்த காற்றில் சிக்கி விமானம் பயங்கரமாக மேலும் கீழும் கொந்தளித்துள்ளது.

இதன் போது பயணிகள் இருக்கையில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர். விமானத்திலிருந்து பொருட்கள் பல உடைந்து சிதறியுள்ளது. இதில், சில பயணிகள் உட்பட விமானக் குழுவினரும் காயமடைந்துள்ளனர். குழந்தைகள் வாந்தி எடுத்துள்ளனர்.

விமானம் தரையிறங்கிய உடனே பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாக எமிரேட்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் இதுபோன்ற காலநிலைய மாற்றம் வருவதைக் விமானிகளால் காண முடியும், உடனே பயணிகளை இருக்கையில் அமர்ந்து சீட் பெட்ல்ட் அணியுமாறு எச்சரிப்பார்கள். ஆனால், இது திடீரென பயங்கரமாக எற்பட்டுள்ளது என எமிரேட்ஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்