27 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சியில் சரிவை சந்தித்த சீனா!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சீனாவின் பொருளாதார வளர்ச்சி இரண்டாவது காலாண்டில் 6.2 சதவிதமாக குறைந்துள்ளது.

சீன அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில், கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவிதமாக சரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு 2019ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், சீனாவின் பொருளாதாரம் 6.4 சதவித வளர்ச்சியைப் பெற்றிருந்தது. முதல் அரையாண்டில் 6.3 சதவித வளர்ச்சியை பெற்றிருந்ததால், 6.56 லட்சம் கோடி டொலரைத் தொட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடி காணப்பட்டது. அப்போது சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவிதத்துக்கும் குறையாமல் இருந்தது. ஆனால், தற்போது சதவித அளவு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.6 சதவிதமாக காணப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அதன் வளர்ச்சி 6.0 முதல் 6.5 சதவிதம் அளவுக்கே இருக்கும் என சீன அரசு பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு குறைத்து இலக்கு நிர்ணயித்துள்ளது.

சர்வதேச தேவையில் ஏற்பட்ட மந்த நிலை மற்றும் அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக போர் ஆகியவையே, சீனாவின் இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்