3 வயதில் கடத்தி செல்லப்பட்ட மகள்: 30 வருடங்களுக்கு பின் தாயை சந்தித்த நெகிழ்ச்சி தருணம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் 3 வயதில் கடத்தி செல்லப்பட்ட மகள் 30 வருடங்களுக்கு பின் தன்னுடைய தாயை கட்டிப்பிடித்து அழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சிஹுஷான் நகரத்தைச் சேர்ந்த தம்பதியினர் டாங் வீ மற்றும் டாங் ஷு.

இவர்களுடைய இளைய மகள் வாங் எஸ் ஹான் ஷான். 1989ம் ஆண்டு திருமண நிகழ்வில் பூ தெளிக்கும் சிறுமியாக தங்களுடைய மகளை வீட்டில் வேலை செய்யும் பணியாளுடன் தம்பதியினர் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்து கடத்தப்பட்ட சிறுமி, 300 மைல்கள் தொலைவில் உள்ள ஒரு குடும்பத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளார்.

மகளை பல நாட்களாக தேடிப்பார்த்த தம்பதியினரும், பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் 30 வருடங்களுக்கு பிறகு வாங் எஸ் ஹான் ஷான் இருப்பிடத்தை கண்டுடிபித்த பொலிஸார் அவருடைய உயிரியல் பெற்றோருடன் சேர்த்துள்ளனர்.

தாயும் மகளும் கட்டிப்பிடித்து தங்களுடைய பாசத்தை கண்ணீராக வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் வேலை செய்து வந்த ஹு (68) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, வாங் எஸ் ஹான் ஷான் உடன் சேர்த்து அவருடைய சகோதரியையும் கடத்த தான் திட்டமிட்டேன். ஆனால் வாங் எஸ் ஹான் ஷானை மட்டுமே அவருடைய பெற்றோர் என்னுடன் அனுப்பி வைத்தனர் எனக்கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers