5வது மாடியில் இருந்து தவறிய குழந்தை... பதறிப்போன தாய்: அடுத்து நடந்த அதிசயம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

5 வது மாடியின் ஜன்னலில் இருந்து தவறிய குழந்தை, துணி காயவைக்கும் கயிற்றில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் உக்ரைன் நடந்துள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த யூலியா ரோகக் (21) என்கிற தாய், வீட்டில் இருந்த பாத்திரங்களை கழுவும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அவருடைய 11 மாத குழந்தை டெமியான், ஜன்னலை திறந்து வெளியில் குதித்துள்ளான். இதனை பார்த்த குழந்தையின் தாய் பதறிக்கொண்டு வெளியில் எட்டி பார்த்துள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை மூன்றாவது மாடியில் இருந்த துணி காயவைக்கும் கயிற்றில் சிக்கிக்கொண்டு தொங்கியுள்ளது.

உதவி கேட்டு யூலியா ஒருபுறம் சத்தமிட, பூனைக்கு உணவு வைத்துக்கொண்டிருந்த மற்றொரு பெண்ணும் அலற ஆரம்பித்துள்ளார்.

அந்த சமயத்தில் கீழே நடந்து சென்ற இரண்டு ஆண்கள், குழந்தை அந்தரத்தில் தொங்குவதை பார்த்து உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

ஒருவர் வேகமாக குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மற்றொருவர் கீழே விழுந்தால் குழந்தையை பிடிப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.

ஆனால் இவற்றை பார்க்க முடியாமல் யூலியா கண்களை மூடிக்கொண்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்த போது, குழந்தை அந்த இருவரின் கைகளில் இருந்துள்ளது. பின்னர் வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு பரிசோதித்த மருத்துவர் வாலண்டைன் மார்டினியூக், குழந்தையின் தலை, வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்