தலை துண்டித்து கொல்லப்பட்ட இளம்பெண்கள் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மொராக்கோவில் இரண்டு இளம்பெண்கள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நோர்வே நாட்டைச் சேர்ந்த மாரன் யூலண்ட் (28) மற்றும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த லூயிசா ஜெஸ்பர்சன் (24) என்கிற இரண்டு இளம்பெண்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மொராக்கோவில் உள்ள மலைப்பகுதியில் கழுத்து துண்டித்து கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவமானது அந்த நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர்.

அந்த இரண்டு இளம்பெண்களும் மலைக்கு செல்வதற்கு முன்னர் மூன்று ஆண்களுடன் மராகேஷில் உள்ள ஹோட்டலில் இருப்பது சிசிடிவி காட்சியில் கண்டறியப்பட்டது.

அதன்பேரில் Abdelsamad al-Joud, Younes Ouziad மற்றும் Rashid Afati ஆகியோரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது மூன்று பேரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், மூன்று குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதில் குற்றம் சுமத்தப்பட்ட நான்காவது நபரான Abderrahmane Khayali-விற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்