சாவுங்கள் எனக் கூறி தீ வைத்தார்.. 33 பேர் உடல் கருகி பலியான விபத்தை நேரில் பார்த்தவர்கள்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் நடந்த தீ விபத்தில் 33 பேர் பலியான நிலையில், எரியும் திரவம் ஒன்றை சாவுங்கள் என்று கூறியவாறு, நபர் ஒருவர் ஊற்றியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோவான கியோட்டோவுக்கு, மர்ம நபர் ஒருவர் நேற்றைய தினம் தீ வைத்ததால், கட்டிடத்தில் தீப்பிடித்து இதுவரை 33 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

மேலும், படுகாயம் அடைந்தவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், பெட்ரோல் போன்ற ஒரு திரவத்தை ஸ்டூடியோவை சுற்றி ஊற்றிக்கொண்டு, சாவுங்கள் என்று ஜப்பானிய மொழியில் நபர் ஒருவர் கூறினார் என தெரிவித்துள்ளனர். இதனை அந்நாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

இதுவரை இந்த தீ வைப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. ஆனால், தனக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் பல சமீபத்தில் வந்ததாக அனிமேஷன் ஸ்டூடியோவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

AP

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்