விமானத்தை சாமர்த்தியமாக திருடி விபத்தில் சிக்கிய சிறுவன்... பின்னர் நடந்த திக் திக் காட்சிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் 13 வயதே ஆன சிறுவன் இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள தைஹு என்ற ரிசார்டில் மெக்கானிக்குகள் பழுது நீக்கி ஓட்டிப்பார்த்ததை அருகில் இருந்த 13 வயது சிறுவன் கவனித்து வந்தார்.

ஆர்வ மிகுதியில் கடந்த திங்களன்று நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி ரிசார்டுக்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஷீ ரே ரக விமானத்துக்குள் ஏறி ஓட்டிப்பார்த்தார். ஆனால் சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அருகாமையில் உள்ள கட்டிடத்தில் இடித்தவாறு நிறுத்தியுள்ளான்.

இருப்பினும், துளியும் அச்சமின்றி ஆர்வமிகுதியால் உயிரையும் துச்சமாக மதித்து சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் மற்றொரு விமானத்தையும் ஓட்டிப்பார்த்துள்ளார்.

பின்னர் தமது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து மாயமாகியுள்ளான். சிறுவனின் இந்த சாகச காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்தது.

சிறுவன் பயன்படுத்தி மோதிய விமானத்தின் சேத மதிப்பு 8 ஆயிரம் யுவானாக இருந்தாலும், அவரது தந்தையிடம் ரிசார்ட் நிறுவனம் 2 ஆயிரம் யுவான்களை மட்டுமே அபராதமாகப் பெற்றது.

13 வயதே ஆனாலும் பயிற்சி இன்றி 2 மணி நேரம் கவனித்ததை மட்டும் வைத்து விமானத்தை இயக்கிய சிறுவனை, விமான கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்