வெளிநாட்டில் தமிழ் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை... கதறி அழுது வெளியிட்ட வீடியோவின் பின்னணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குவைத்திற்கு சென்ற நிலையில், நான் இங்கு சித்ரவதைக்குள்ளாகி வருவதாகவும், நான் இந்தியா திரும்புவதற்கு உதவி செய்யும் படி கண்கலங்கிய நிலையில் வீடியோ வெளியிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் மதுரையில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் வீட்டு வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் குவைத் சென்றுள்ளார்.

இதையடுத்து மகேஸ்வரியின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், தான் குவைத்தில் அடித்து சித்ரவதை செய்யப்படுவதாகவும், தனக்கு உண்ண உணவோ, ஓய்வோ, ஊதியமோ கொடுக்கப்படுவதில்லை, தன்னோடு சேர்த்து 4 பெண்கள் குவைத் அழைத்துவரப்பட்டதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் தங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்