தேனிலவில் கணவருடன் ஜாலியாக இருந்த புதுப்பெண்.. அங்கு அவருக்கு வந்த மெசேஜால் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இத்தாலிக்கு தேனிலவு சென்ற புதுப்பெண்ணுக்கு வந்த மெசேஜ் மூலம் அவரின் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இளம் பெண்ணொருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தனது கணவர் ஹேரியுடன் இத்தாலிக்கு தேனிலவு சென்றார்.

தேனிலவு சென்ற மூன்றாவது நாள் அவரின் பேஸ்புக்குக்கு சாரா என்ற பெண்ணிடம் இருந்து மெசேஜ் வந்தது.

அதில், நானும் ஹேரியும் காதலித்தோம், மூன்று மாதங்களாக இருவரும் ஒரே படுக்கையில் நெருக்கமாக உறங்கினோம், ஒரு மதுபான விடுதியில் தான் நாங்கள் முதன் முதலில் நண்பர்களாக ஆனோம்.

உன்னுடன் திருமண நிச்சயதார்த்தம் ஆனபின்னர் என்னுடனான தொடர்ப்பை ஹேரி துண்டித்துவிட்டார் என கூறப்பட்டிருந்தது.

இதை பார்த்த புதுப்பெண் அதிர்ச்சியடைந்து இது குறித்து கணவரிடம் கேட்டார்.

அதற்கு ஹேரி தனது தவறை ஒப்பு கொண்டார், மேலும் இது போல தவறை இனி செய்யமாட்டேன் என கூறினார்.

ஹேரி மேல் உயிரையே வைத்துள்ள அவர் மனைவி அவர் தவறை மன்னித்து தொடர்ந்து அவருடன் வாழ சம்மதித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்