ஒரு முழுக்குரங்கையும் ஒரே வாயில் விழுங்கிய கொமோடோ ட்ராகன்: ஒரு திகில் வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஒரு குரங்கை அப்படியே ஒரே வாயில் கொமோடோ ட்ராகன் ஒன்று விழுங்கும் அபூர்வ வீடியோ ஒன்று வெளியாகி திகிலைக் கிளப்பியுள்ளது.

அந்த விஷ பல்லி குரங்கை விழுங்கும் காட்சி இந்தோனேஷியாவில் சிக்கியது. வெளியாகியுள்ள வீடியோவில், வெறும் ஆறு முறை விழுங்கி, ஒரு முழு குரங்கையும் அந்த ட்ராகன் கபளீகரம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.

கொமோடோ ட்ராகன்கள், உலகின் படுபயங்கர கொன்று தின்னிகள் வகையைச் சேர்ந்த விலங்குகளாகும்.

தனது உடல் அளவில், 80 சதவிகிதம் அளவு உள்ள விலங்குகளை கூட அவை சர்வசாதாரணமாக விழுங்கிவிடும்.

அவை பன்றிகள், மான்கள் மற்றும் பாம்புகளை விரும்பி உண்ணுவதோடு, மணிக்கு 15 மைல் வேகத்தில் ஓடக்கூடியவையுமாகும்.

கொமோடோ ட்ராகன்களின் எச்சிலில் 50 வெவ்வேறு வகை பாக்டீரியங்கள் உள்ளான். எனவே கொமோடோ ட்ராகனிடம் கடிபட்டு ஒரு விலங்கு தப்பினாலும், பின்னர் கடிபட்ட விலங்கு, நச்சு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிடும்.

இதுவரை குறைந்தது நான்கு மனிதர்களையாவது கொமோடோ ட்ராகன்கள் கொன்றுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தைய நிகழ்வாக, 2009இல், மரத்திலிருந்து விழுந்த ஒருவரை இரண்டு கொமோடோ ட்ராகன்கள் கடித்துக் குதறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்