20 முறை 53 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்... பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்து செய்த செயல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

துபாயில் 53 வயது பெண்ணை 20 முறை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நைஜீரியாவைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க நகை வடிவமைப்பாளருக்கு, சமூகவலைத்தளம் மூலம் 53 வயது பெண் அறிமுகமாகியுள்ளார்.

இதனால் இருவரும் சகஜமாக பேசி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 4-ஆம் திகதி Dubai Marina-வில் இருக்கும் காபி ஷாப்பிற்கு அந்த பெண்ணை இவர் அழைத்துள்ளார்.

குறித்த பகுதிக்கு அந்த பெண் சென்றவுடன், இந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி, அவரை மிரட்டிய படியே காரில் அழைத்துச் சென்று, ஒரு அறைக்குள் அவரை அடைத்து பூட்டியுள்ளார்.

அதன் பின் அவரிடமிருந்த பாஸ்போர்ட், இரண்டு போன்கள், உடை மற்றும் ஷுவை பிடுங்கி எறிந்துவிட்டு, சுமார் 20 முறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அவ்வப்போது உணவை வற்புறுத்தி சாப்பிட வைக்கும் அவன், நாய் சாப்பிடும் உணவுகளை எல்லாம் கொடுத்துள்ளான்

அந்த அறையில் சிக்கித் தவித்த இந்த பெண், அதன் பின் ஒரு வழியாக அங்கிருந்து தப்பி அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இதனால் இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, குறித்த பெண் அடைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் சிசிடிவி காமெராக்களை ஆராய்ந்த போது, குறித்த நபர் அந்த பெண்ணை அழைத்து சென்றது பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டதால், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்,.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், தற்போது அவரை அவருடைய சொந்த நாட்டிற்கு நாடு கடத்தும் படி உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்