உலகிலேயே முதன்முறையாக மனித - குரங்கு கலப்பில் உருவான கரு!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஒரு ஸ்பானிஷ் விஞ்ஞானி உலகின் முதல் மனித-குரங்கு கலப்பினத்தை சீனாவில் ஒரு ஆய்வகத்தில் வளர்த்து வந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள சால்க் இன்ஸ்டிடியூட்டில் ஒரு ஆய்வகத்தை நடத்தி வரும் ஸ்பெயினில் பிறந்த உயிரியலாளர் ஜுவான் கார்லோஸ் இஸ்பிசியா பெல்மோன்ட், சீனாவில் குரங்கு ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து ஒரு குழப்பமான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருவதாக El País பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜுவான் கார்லோஸ் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய குழுவினருடன் இணைந்து முதல்முறையாக மனித-பன்றி கலப்பின பரிசோதனையை நடத்தியதாகவும், ஆனால் மனித செல்கள் அதனுடன் இணையவில்லை எனவும் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் மனித உறுப்பு மாற்று சிகிச்சைக்கு விலங்குகளைப் பயன்படுத்துவதற்கான திருப்புமுனை சோதனையாக மனித-குரங்கு கலப்பின கருவை உருவாக்கியதாக ஜுவான் கார்லோஸ் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காக இந்த சோதனை சீனாவில் நடத்தப்பட்டுள்ளது. சோதனையில், குரங்குகளின் கருவில் உறுப்புகள் உருவாவதற்கு அவசியமான மரபணுக்களை செயலிழக்க செய்து மரபணு மாற்றுவதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கலப்பின கருவை உருவாக்கினர்.

பின்னர் அவர்கள் கருவை மனித ஸ்டெம் செல்கள் மூலம் செலுத்தினர். கருவுக்குள் அவை எந்த வகையான திசுக்களையும் உருவாக்கும் திறன் கொண்டவை.

குழு இதுவரை தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிடவில்லை, ஆனால் கலப்பினத்தை உருவாக்கியதாக மட்டும் அறிவித்துள்ளது.

'சிவப்பு கோடு' என்று அழைக்கப்படும் ஒரு புள்ளி - அதாவது கரு ஒரு மைய நரம்பு மண்டலத்தை உருவாக்க முடியாத காரணத்தால், கருவுற்ற 14 நாட்களில் கரு அழிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்