வெளிநாட்டில் பணங்களை நடுரோட்டில் வீசிய வீடியோவை வெளியிட்ட ஆசிய நாட்டைச் சேர்ந்தவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
துபாயில் இருக்கும் முக்கிய வீதி ஒன்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக நபர் ஒருவர் அந்நாட்டின் திர்கான் நோட்டுகளை வீதியில் வீசியபடி சென்றுள்ளார்.
இதை அவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட அந்த வீடியோ வைரலானது. அந்நாட்டு சட்டப்படி பணத்தை தேவையில்லாமல், பிரபலமாகுவதற்காக வீசுவது போன்ற செயல்களை செய்வது குற்றமாகும்.
இதனால் சைபர்கிரைம் அதிகாரிகள் அந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டதால், அந்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரித்த போடு, நான் இதை சமூகவலைத்தளங்களில் லைக் மற்றும் பாலோவர்களுக்காக இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் பொலிசார் அவரை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.