அவள் என் ஆண்மையையும் ஏழ்மையையும் அவமதித்ததால்தான் அவளை கொன்றேன்: ரஷ்ய மொடலின் முன்னாள் காதலன்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
254Shares

ரஷ்யாவில் அழகிய மொடல் ஒருவரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது முன்னாள் காதலர், தனது ஆண்மையையும் ஏழ்மையையும் அவமதித்ததால்தான் அந்த பெண்ணைக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் புகழ் மொடலான Ekaterina Karaglanova (24) திடீரென மாயமானதையடுத்து, அவரது பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அவரது முன்னாள் காதலரான Maxim Gareyev கைது செய்யப்பட்டார்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அவள் தொடர்ந்து என்னை அவமதித்ததோடு என்னுடைய ஆண்மையையும் அவமதித்தாள் என்று கூறியுள்ள Gareyev, எனது ஏழ்மையையும் அவள் அவமதிக்கவே என்னால் அதை தாங்கிக் கொள்ள இயலவில்லை, எனவேதான் அவளை கத்தியால் கழுத்திலும் மார்பிலும் குத்திக் கொன்றேன் என்று கூறியுள்ளார்.

Ekaterinaவைக் கொன்றபின், அவளது உடைகளை அகற்றி, அவளை நிர்வாணமாக்கி சூட்கேசுக்குள் அடைத்ததாக Gareyev கூறியுள்ளதாக ரஷ்ய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட Gareyev, Ekaterinaவின் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, தனது செய்கைக்காக வெட்கப்படுவதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

Gareyev மன நல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்