நீதியரசர் முன்பு மார்பகங்களை திறந்து காட்டிய பெண்: வெளியான பரபரப்பு பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பேஸ்புக் பதிவுக்கு தண்டனை வழங்கிய நீதியரசர் முன்பு பெண் ஒருவர் தனது மார்பகங்களை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உகாண்டாவில் பிரபலமான கல்வியாளர்களில் ஒருவரும் பல்கலைக்கழக விரிவுரையாளருமான ஸ்டெல்லா நியான்சி என்பவரே நீதியரசர் முன்பு தமது மார்பகங்களை காட்டியதுடன் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டவும் செய்தவர்.

இவர் உகாண்டாவின் 74 வயதான ஜனாதிபதி முசேவேனிக்கு எதிராக தமது பேஸ்புக் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.

இதற்காக கைது செய்யப்பட்ட 44 வயதான நியான்சி, காணொளி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை தீர்ப்புக்கு எதிராகவே நியான்சி தமது மார்பகங்களை திறந்து காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தில் தம்மை நேரிடையாக விசாரணைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொலிசார் நிராகரித்ததற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகாலமாக உகாண்டாவை முசேவேனி கொடுங்கோல் ஆட்சியால் சீரழித்துள்ளதாக கூறும் நியான்சி,

கருவிலேயே இவர் கரைந்திருந்தால் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது என தமது பேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

முன்னர் ஒருமுறை இதேபோன்று ஜனாதிபதி முசேவேனியை விமர்சித்ததாக கூறி 5 மாதம் சிறை தண்டனை அனுபவித்தவர் நியான்சி.

கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் உகாண்டாவை முசேவேனி ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்