பிரித்தானியா-ஈரான் இடையே போர்.. யார் வெற்றிப்பெறுவார்? வெளியுறவுக் கொள்கை எழுத்தாளர்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பிரித்தானியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரின் விளைவை, உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை எழுத்தாளர் வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க தேசிய இதழுக்கான ஒரு கட்டுரையில் வெளியுறவுக் கொள்கை எழுத்தாளரான மைக்கேல் பெக் எழுதியதாவது, எந்தவொரு மோதலிலும் பிரித்தானியா தொழில்நுட்ப சக்தியுடன் திகழும் என்று பரிந்துரைத்தார்.

அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி இருந்தாலும், இல்லாவிட்டாலும், பிரித்தானியாவிடம் நிச்சயமாக அணு ஆயுதங்கள் உள்ளது.

நான்கு வான்கார்ட்-வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கிறது, ஒவ்வொன்றும் 16 ட்ரைடென்ட் தெர்மோநியூக்ளியர்-ஆயுத பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டுள்ளன.

ஈரான் ஒருபுறம் இருக்கட்டும், இந்த அணு ஆயுதத்தை கொண்டு ரஷ்யாவையும் சீனாவையுமே இடைக்காலத்திற்கு திருப்பி அனுப்புவதற்காக போதுமான சக்தி பிரித்தானியாவிடம் இருக்கிறது.

எவ்வாறாயினும், அரசியல் மற்றும் மனிதாபிமான காரணங்களுக்காக பிரித்தானியா இதைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை. பிரித்தானியாவிற்கு அதன் எதிரிகளை விட மிகச் சிறந்த உபகரணங்கள் உள்ளன என்பதை தெளிவுபடுத்தினார்.

ஈரானிய விமானப்படையிடம் ஒரு சில பழைய அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட எஃப் -14 மற்றும் எஃப் ரக போர் விமானங்களே இருக்கிறது. இதற்கு மாறாக பிரித்தானியாவிடம் மேம்பட்ட போர் விமானங்கள் இருக்கிறது.

பிரித்தானியா உடனான எந்தவொரு போரிலும், ஈரானியர்களின் பலமே கடல்வழி தான், அவர்கள் நீரிலிருந்து கெரில்லா தந்திரோபாயங்களை பயன்படுத்தி செயல்படுவார்கள் என்று பெக் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், பிரித்தானியா தனியாகப் போராடுவது சாத்தியமில்லை என்றும், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் சேர்ந்து போராடும் என்றும் பெக் குறிப்பிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்