வெளிநாட்டில் இருக்கும் தமிழர் 6 வயது மகளின் ஆசைக்காக செய்து வரும் நெகிழ்ச்சி செயல்... குவியும் பாராட்டு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டில் இருக்கும் தமிழர், தன்னுடைய 6 வயது மகளை தமிழகத்திற்கு அழைத்து வந்து கரகாட்டம் கற்றுக் கொள்ள வைக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளதால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழகத்தின் திருவாரூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவர் குவைத்தில் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இதனால் இவருடன் குடும்பத்தினர் தங்கி வருகின்றனர்.

இவரது 6 வயது மகள் தனஸ்ரீ அங்குள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பழனிச்சாமி கரகாட்ட கலையை முறைப்படி மகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக தஞ்சை சேர்ந்த கரகாட்ட கலைஞர் தேன்மொழி ராஜேந்திரனிடம் பயிற்சிக்காக சேர்த்துள்ளார்.

பள்ளி விடுமுறை நாட்களில் குவைத்தில் இருந்து தஞ்சாவூர் வந்த தனஸ்ரீ கரகாட்டம் கற்றுகொள்கிறார்.

பலகைமேல் ஆடுதல், தட்டு மேல் ஆடுதல், என முறையான பயிற்சி அவருக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் பள்ளி ஆண்டு விழாவில் கரகாட்டம் ஆடிய தன ஸ்ரீயின் வீடியோ சமூகவலத்தளங்களில் வைரலானதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் தன ஸ்ரீ இது குறித்து கூறுகையில், தமிழர்களின் பாரம்பரிய கலையான கரகாட்டத்தை கற்க இளம் தலைமுறையினர் முன்வந்து அந்த கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்