ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 95 பேர் காயம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலை குண்டுதாரி நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 95 பேர் காயமடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

5000 அமெரிக்க இராணுவ வீரர்களை திரும்ப பெறுவதற்கான ஒரு வரலாற்று உடன்படிக்கைக்கு தலிபானும் அமெரிக்காவும் நெருக்கமாகத் தோன்றினாலும், தலிபான்கள் இன்னும் தங்களுடைய வன்முறையை ஆப்கானிஸ்தானில் குறைக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், காவல் நிலையத்திற்கு வெளியே ஒரு சோதனைச் சாவடியில் தற்கொலை குண்டுதாரி கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

காயமடைந்த 95 பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் என்று அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

செப்டம்பர் 28-ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க தலிபான்கள் அழைப்பு விடுத்து, தேர்தல் பேரணிகளைத் தாக்குவதாக அச்சுறுத்திய ஒரு நாள் கழித்து இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers