ரஷ்யாவில் கரடியால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நபர் என்ன ஆனார் தெரியுமா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் கரடியால் தாக்கப்பட்டு, கரடியின் எதிர்கால உணவுக்காக குகை ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நபர் சோரியாசிஸ் நோயால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

ரஷ்யாவிலுள்ள வேட்டைக்காரர்கள் சிலர் வேட்டைக்கு சென்றபோது, வேட்டை நாய்கள் ஒரு குகையின் அருகில் நகராமல் நின்று குரைத்ததாகவும், குகைக்குள் சென்று பார்த்த போது மம்மி போல ஒரு நபர் கிடப்பதைக் கண்டதாகவும், அவர் ஒரு மாதமாக தனது சிறுநீரை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்ததாகவும் ஒரு செய்தி வைரலாக பரவியது.

ஆனால் Dr Rustam Isaev என்னும் மருத்துவர், கரடியால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர், தன்னிடம் சிகிச்சை பெற்ற நோயாளி என்றும், அவரது பெயர் Alexander Proskurin என்றும் தெரிவித்திருந்தார்.

உண்மையில் Alexander கரடியால் தாக்கப்படவில்லை என்றும், அவருக்கு தீவிர சோரியாசிஸ் நோய் என்றும் அந்த மருத்துவர் தெரிவித்திருந்தார்.

தனது மருத்துவமனையில் உள்ள யாரோ ஒரு ஊழியர்தான் Alexanderஐ வீடியோ எடுத்து பொய்யான ஒரு செய்தியை பரப்பியிருக்கலாம் என்று தெரிவித்த அவர், அந்த ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

Alexanderஇன் உடலில் இருந்த ஏராளமான புண்கள் வழியாக நோய்க்கிருமிகள் அவரது இரத்தத்திற்குள் நுழைந்து, அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தன்னைக்குறித்து பொய்யான தகவல் பரப்பிய அந்த நபர் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையிலேயே, Alexander உயிரிழந்து விட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்