இந்த படிகளில் அமர்ந்தால் 400 யூரோக்கள் அபராதம்..! அப்படி என்ன சிறப்பு?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இத்தாலியில் உள்ள ரோம் நகரின் ஸ்பானிஷ் படிகள் மீது அமர்ந்தால் 400 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோமின் புகழ்பெற்ற வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமானது ‘ஸ்பானிஷ் படிகள்’. இந்த படிகள் 1723 மற்றும் 1726ஆம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலங்களில் கட்டப்பட்டது.

பிரான்செஸ்கோ டி சாங்டிஸ் எனும் கட்டிடக்கலை வல்லுனர் இதனை வடிவமைத்தார். 174 படிகளுடன் நீண்டு செல்லும் இப்படிகளின் உச்சிப்பகுதியில் ட்ரிண்டா டி மாண்டி தேவாலயம் அமைந்துள்ளது.

இந்நிலையில், ரோம் நகருக்கு சமீப காலமாக சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். கட்டுக்கடங்காமல் வரும் கூட்டத்தினால், காலம் கடந்து நிற்கும் வரலாற்று சின்னங்களுக்கு சேதம் ஏற்பட்டு விடுமோ என்று இத்தாலி அரசு கவலையடைந்துள்ளது.

ALESSANDRO BIANCHI/REUTERS

எனவே, ‘ஸ்பானிஷ் படிகள்’ உள்பட மேலும் சில உலகப் புகழ்பெற்ற வரலாற்று சின்னங்களில் ‘முகாமிடுதல்’ அல்லது உட்கார்ந்து கொண்டு வீடியோ, புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றை தடை செய்யும் வகையில் புதிய விதிகளை இத்தாலி அறிவித்தது.

அதன்படி தற்போது ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த படிகளில் அமரும் சுற்றுலா பயணிகளை, சிறப்பு சுற்றுலா பிரிவு பொலிசார் விசில் அடித்து எச்சரித்து அப்புறப்படுத்துகின்றனர்.

FILIPPO MONTEFORTE/AFP

அதையும் மீறி எவரேனும் புகைப்படம் எடுக்க முயன்றால், அவர்கள் மீது விதிகளை மீறியவர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்டு, 400 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

AP

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்