போர் வந்தால்... ரஷ்யாவா? அமெரிக்காவா? கதிகலங்க வைக்கும் முக்கிய தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்க இராணுவ தொழில்நுட்பங்களோடு ஒப்பிடுகையில், ரஷ்யா மிகவும் முன்னிலை வகிப்பதாக மிகத் தெளிவாக அமெரிக்காவை சேர்ந்த பகுத்தாய்வாளர் கூறியுள்ளார்.

உலகநாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அணு ஆயுதத்தில் யார் பலம்? போர் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் உளவியல் போர் அதிகாரியான Scott Bennett பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், அமெரிக்கா சமீபத்தில் நடத்திய அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களின் பரிசோதனைகள் எல்லாம் மக்களை குழப்புவதற்காக செய்யப்பட்டவை.

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவை விட ரஷ்யாவின் ராணுவ தொழில்நுட்பம் தான் உச்சத்தை அடைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக ரஷ்யாவின் ஏவுகணை தொழில்நுட்பமானது எந்த விதமான போரையும் எளிதில் முடித்துவிடக் கூடியது, உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், ரஷ்ய ஏவுகணை தொழில்நுட்பமானது அனைத்து வகையான ஏவுகணை தொழில்நுட்பத்தின் உச்சம்.

இதுவரை எந்த போரிலும் காணப்படாத அதிநவீன போர் விமானங்களை சிரியா மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் நாம் அதை காணமுடியும் என்று குறிப்பிட்டுள்ள கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவின் கென்னன் இன்ஸ்டியூட்டை சேர்ந்த Michael Kofman கூறுகையில், அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தோடு ஒப்பிட்டு பார்த்தால், ரஷ்யா மிகவும் சக்தி வாய்ந்தது என்று தான் நான் கூறுவேன்.

ஏனெனில், 900 மைல்கள் பயணித்து தாக்கும் ஏவுகணையானது உண்மையிலேயே மிகவும் திறன் வாய்ந்த ஒரு அதிநவீன தொழில்நுட்ப ஆயுதம்.

உலகம் கற்பனை செய்வதை விட மிகவும் அதீத ராணுவ தொழில்நுட்ப சக்தியை ரஷ்யா கொண்டுள்ளது என்பது, சிரியா மீதான தாக்குதல் மூலம் அம்பலமாகியுள்ளது என்று Scott Bennett கூறியதையே இவரும் கூறினார்.

அதிநவீனம் என்பது ரஷ்யாவின் ஆயுதங்களில் மட்டுமில்லை ரஷ்யாவின் யுத்த தந்திரத்திலும் கூட இருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்